திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு: ஜூலை 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கோயில்கள் சிறப்பு சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் மகா குடமுழுக்கு நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் நேரத்தை தீர்மானிக்க அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம், கோயில் நிர்வாக குழுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ,இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. தற்போது திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் நேரத்தை கோயில் நிர்வாகம் நேற்று மாலை அறிவித்தது. இதுகுறித்து அறநிலையத் துறை இணை ஆணையர் சு.ஞானசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழா இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்குட நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *