நடிகை சமந்தா தனது 2வது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 2 சீரிஸின் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக காதலில் இருந்ததாக செய்திகள் வெளியாகி வந்தன.இந்நிலையில், சமந்தாவின் திருமணம் இன்று கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் எளிமையாக நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்தின் புகைப்படங்களை சமந்தா தனது சமூக வலைதளப்பக்கதில் பதிவிட்ட நிலையில்ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

