‘இசிஐ நெட்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்த தேர்தல் கமிஷன்.

செய்திகள்

வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகள் பயன்பெறும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ‘இசிஐ நெட்’ என்ற புதிய செயலியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக தவறான தகவல்கள் பரவுவது குறித்து பல்வேறு நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புத் தலைவர்கள் கவலை தெரிவித்ததாக கூறினார். இதனைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘இசிஐ நெட்’ செயலியில், தேர்தல் தொடர்பான அனைத்து உண்மையான தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்றும், இது வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *