சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. இந்த சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.தமிழக வெற்றிக் கழகம் தற்போது பதிவு செய்யப்பட்டாலும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக இருப்பதால், 234 தொகுதிகளிலும் போட்டியிட ஏதுவாக ஒரு பொதுச் சின்னம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. அதன்படி, கட்சித் தலைமை சார்பில் சுமார் 10 விருப்பச் சின்னங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் விசில், ஆட்டோ, மட்டைப்பந்து, மடிக்கணினி, கப்பல், மைக்ரோஃபோன் உள்ளிட்ட சின்னங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.இந்த விருப்பங்களில் இருந்து ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் தேர்வு செய்து ஒதுக்கியுள்ளது. விஜய்யின் ரசிகர்களிடையே இந்த சின்னம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பொதுமக்களுக்கும் எளிதில் நினைவில் நிற்கும் வகையில் இருப்பதால், ‘விசில்’ சின்னம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியத் தேர்வாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

