குஜராத் டைட்டன்ஸ் அணி பேருந்தில் தீ விபத்து.. வீரர்கள் பாதுகாப்பாக மீட்பு!

இந்தியா ஐபிஎல் தொடர் செய்திகள் விபத்துகள் விளையாட்டு

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நேர்ந்துள்ளது. போட்டி முடிந்து ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்த அணியின் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் பேருந்தில் ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது பேருந்தில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வாகனம் முழுவதும் புகை சூழ்ந்ததுடன், பின்னர் தீப்பிடித்தது. சம்பவம் நடந்த உடனே வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்த தீ விபத்தால் வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் சாலையோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் ஏமாற்றம் நீங்காத நிலையில், இந்த சம்பவமும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மேலும் ஒரு சோதனையாக அமைந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *