தமிழ்நாடு மாநில விலங்கு நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க புது திட்டம்; தமிழக அரசு தொடக்கம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வனவிலங்குகள்

நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை 25 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், வனத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வரையாடுகளை பாதுகாப்பதற்கான திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரையாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புத்தகங்களை வழங்கினார்.
இந்தத் திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்கு சான்றாக, நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *