விரைவில் இந்தியாவில் புழக்கத்திற்கு வரும் பிளாஸ்டிக் நோட்டுகள்

செய்திகள்

ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று, இந்தியாவில் சோதனை அடிப்படையில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதற்கட்டமாக ₹10 மற்றும் ₹20 மதிப்பிலான நோட்டுகள் பிளாஸ்டிக் கரன்சி வடிவில் அச்சிடப்பட உள்ளன. ஒவ்வொரு மதிப்பிலும் தலா ₹100 கோடி மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை வெளியிட்டு, அவற்றின் பயன்பாடு மற்றும் நீடித்த தன்மை குறித்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் அதிக நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தண்ணீரில் நனைந்தாலும் எளிதில் சேதமடையாமல் இருப்பது, அழுக்கு மற்றும் ஈரப்பதத்தை குறைவாக உறிஞ்சுவது போன்ற பலன்கள் இருப்பதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில், கள்ளநோட்டு தயாரிப்பைத் தடுக்கும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கவும் வாய்ப்பு உள்ளது. சோதனை முயற்சியின் முடிவுகளைப் பொறுத்து, எதிர்காலத்தில் இந்தியாவில் அதிக மதிப்பிலான நோட்டுகளுக்கும் பிளாஸ்டிக் கரன்சி அறிமுகப்படுத்தப்படுமா என்பது முடிவு செய்யப்படலாம்.பிளாஸ்டிக் நோட்டுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எப்போது வரும், எந்த பகுதிகளில் முதற்கட்டமாக புழக்கத்திற்கு விடப்படும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *