ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோர் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு!

செய்திகள்

நாட்டில் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.அதில், 2021-22ஆம் மதிப்பீட்டு ஆண்டில் ஆண்டுக்கு ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் வருமானம் இருப்பதாக 142 பேர் மட்டுமே வருமான வரிக் கணக்கில் தெரிவித்திருந்தனர். தற்போது, 2025-26ஆம் மதிப்பீட்டு ஆண்டில் இந்த எண்ணிக்கை 576-ஆக உயர்ந்துள்ளது.எனினும், இந்த எண்ணிக்கை அவர்களின் மொத்த சொத்து மதிப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஒரு ஆண்டில் அவர்கள் ஈட்டிய வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. எனவே, ஒருவரிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்தாலும், அவரது ஆண்டு வருமானம் ரூ.100 கோடிக்கு குறைவாக இருந்தால், அவர் இந்தப் பட்டியலில் இடம்பெறமாட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *