புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

இந்திய வணிகம் இந்தியா சிறப்பு செய்திகள் பொருளாதாரம்

இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டின் ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. நேற்று வெளியான அறிவிப்பில், விரைவில் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிய வடிவத்தில் அச்சிடப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்போது புழக்கத்தில் உள்ள பழைய 10 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.புதிய ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் மல்கோத்ராவின் கையெழுத்துடன் வெளியிடப்படவுள்ளது. அவர் கடந்த டிசம்பர் மாதத்தில் ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும், புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளும் ரிசர்வ் வங்கி ஆளுநர் மல்கோத்ராவின் கையெழுத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *