நாடாளுமன்ர மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாணவர் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் கூட்டத்தொடர் முடங்கிய நிலையில் உள்ளது. இதனிடையே பொதுத்தேர்வு குளறுபடி தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழலில் இன்று கேரளாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’
என மாற்றுவதற்கான மசோதாவை மத்திய அரசு திங்களன்று மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ளது. மாநிலத்தின் பூர்வீக மலையாளப் பெயருடன் அரசியலமைப்பை சீரமைக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026’-ஐ அறிமுகப்படுத்த உள்ளார்.
இந்த மசோதா கேரளாவின் பெயரை “கேரளம்” என மாற்றுவதற்காக அரசியலமைப்பின் முதல் அட்டவணையைத் திருத்தக் கோருகிறது. இந்த மாற்றத்தைக் கோரி கேரள சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தைத் தொடர்ந்து இந்த முன்மொழிவு வந்துள்ளது. மத்திய அமைச்சரவை ஏற்கனவே இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) நிதி அதிகாரங்களை விரிவுபடுத்தும் மற்றொரு மசோதாவையும் இன்றைய கூட்டத்தொடரில் அமிதஷா தாக்கல் செய்யள்ளார்.

