ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த இ.வி.கே.ஸ். இளங்கோவன் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி காலி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பிற கட்சிகள் தேர் புறக்கணித்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர், திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேப்பமனுக்களை தாக்கல் செய்து அனல் பறக்க பரப்புரையில் இரு கட்சியினரும் ஈடுபட்டனர். இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் 53 இடங்களில் சுமார் 237 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் காலத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 2000 க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளர்கள் வாக்களிக்க பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு, காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தினர். திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது குடும்பத்துடன் சேர்ந்து வாக்குகளை பதிவு செய்தனர். இன்று காலை நிலவரப்படி 25.98 சதவீதம் வாக்கும் , மாலை 3 மணிக்கு 53.63 சதவீதம் வாக்குகள் பதிவானது. மேலும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

