தவெக அரசைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொள்ள உள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு மெத்தனமாக செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

