சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல் எட்டிய ஸ்மிருதி மந்தனா!

இந்தியா சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய அவர், 19 ரன்கள் எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 10,756 ரன்களை எட்டினார்.இதன் மூலம் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் நியூசிலாந்தின் முன்னாள் வீராங்கனை சூசி பேட்ஸை பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். சூசி பேட்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 10,740 ரன்கள் எடுத்துள்ளார்.இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 10,868 ரன்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மிதாலி ராஜின் சாதனையை சமன் செய்ய ஸ்மிருதி மந்தனாவுக்கு தற்போது மேலும் 112 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், விரைவில் மிதாலி ராஜின் சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *