வியட்நாமில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டியில் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹேரி மோலா பட்டம் வென்றார்.ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் 2-ம் இடத்தையும், மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண் தனுசியா செட்டி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.தனுசியாவின் தாய்மொழி தமிழ். 14 வயதில் தாயை இழந்த அவர், தந்தையின் ஊக்கத்தால் மிஸ் மலேசியா பட்டத்தை வென்று மிஸ் வேர்ல்டு போட்டியில் பங்கேற்றார்.ஆங்கிலம், மலாய், மாண்டரின், தமிழ் என 4 மொழிகளில் சரளமாகப் பேசும் தனுசியா, “மாற்றம் நமக்குள் இருந்தே தொடங்க வேண்டும்” என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

