அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா வர உள்ளார். இந்தப் பயணத்தின்போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மார்க்கோ ரூபியோவின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் எரிசக்தி தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆலோசிக்கப்படலாம்.
