சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A (16+) சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த திரைப்படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய வகையில், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், சிவகார்த்திகேயனின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.‘பராசக்தி’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

