அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்

செய்திகள்

முதல்வர் விஜய் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றிருந்தார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதல் முறையாக டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை பெற்றது. இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.தமிழகத்தின் உரிமைகள் மற்றும் வளர்ச்சியை மையமாக கொண்டு நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விஜய் வலியுறுத்தினார். மேலும் தமிழக நலனுடன் தொடர்புடைய மொத்தம் 4 முக்கிய கோரிக்கைகள் பிரதமரிடம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *