அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளிக்கலாம்: வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகம்!

அரசியல் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய முயற்சியை அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் பணிகளை மேற்கொள்வதற்காக யாரேனும் லஞ்சம் கேட்டாலோ அல்லது பெற்றாலோ, பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க 94981 80936 என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய வசதி தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய் குமார் அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இந்த வாட்ஸ்அப் உதவி எண் அனைத்து அரசு துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இந்த எண்ணுடன் சேர்த்து லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இணையதளத்திற்கான இணைப்பும் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் புகார் அளிக்கும் போது சம்பவம் நடைபெற்ற இடம், தேதி, சம்பந்தப்பட்ட அதிகாரியின் விவரம் மற்றும் தேவையான ஆதாரங்களை புகைப்படம், வீடியோ அல்லது ஆடியோ வடிவில் வாட்ஸ்அப் மூலம் பகிரலாம். பெறப்படும் புகார்களின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *