முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவி ரத்து

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு ஜோதிடம்

முதல்வர் விஜய்யின் ஜோதிடராக கூறப்படும் ராதன் பண்டிட் வெற்றிவேலை, முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்த அரசாணையை தமிழக அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இதுகுறித்து இன்று வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பில், ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கும் உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழக முதல்வரின் அரசியல் தொடர்பான விவகாரங்களை கவனிக்க அவர் நியமிக்கப்படுகிறார் என்றும், அவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து அந்த நியமனம் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், பணியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நியமனத்திற்கு திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் பேசப்பட்டது. தேமுதிக எம்எல்ஏ பிரேமலதாவும் இந்த நியமனத்தை கண்டித்து கருத்து தெரிவித்தார். ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்கப்படுவது சரியல்ல என்று பல தரப்பில் எதிர்ப்பு அதிகரித்த நிலையில், தவெக அரசு இறுதியாக அந்த நியமன உத்தரவை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *