நாடுமுழுவதும் அமலுக்கு வந்தது ஜி.எஸ்.டி. 2.0. GST கவுன்சில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது.இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.மற்ற பொருட்களுக்கு 2 மற்றும் 18 சதவீதம் என்ற 2 அடுக்கு வரி மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன. ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் விலை குறையும் பொருட்கள் விபரம்.உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதமாக ஜி.எஸ்.டி.,வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால்சாக்லேட்டுகள்,நெய், வெண்ணெய்,உலர் பழங்கள், தின் பண்டங்கள் போன்ற பொருட்களின் விலை குறைகிறது.வீட்டு உபயோகப் பொருட்களில் ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின், டிவி, பாத்திரம் கழுவும் இயந்திரம் ஆகியவையின் மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைந்துள்ளது.சைக்கிளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீத வரியும், கார்கள் மீதான வரி, 28 சதவீதத்தமாக இருந்த வரி 18 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சோப்பு, டூத் பேஸ்ட், ஷாம்பு ,மருத்துவ உபகரணங்கள், சில மருந்து மாத்திரைகள் ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
