இங்கிலாந்தைவிட இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு சிறப்பு! வெளிநாட்டுத் தம்பதி பாராட்டு

செய்திகள்

பிரிட்டனைச் சேர்ந்த டேவ் ஃப்ளூ என்பவர், தனது மனைவிக்கு செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சை அளிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மேக்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவரது மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இங்கிலாந்தை விட இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைகள் விரைவாகவும், குறைந்த செலவிலும் கிடைப்பதாக டேவ் ஃப்ளூ பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், இந்தியாவின் மருத்துவ வசதிகள் தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தில் எக்ஸ்-ரே பரிசோதனை அறிக்கையைப் பெற ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், ஆனால் இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்குள் அறிக்கையைப் பெற முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மருத்துவப் பரிசோதனைகளுக்கு விரைவாக நேரம் கிடைப்பதுடன், ஒரே மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்துகொள்ளும் வசதியும் இருப்பதாகப் பாராட்டியுள்ளார்.இந்தியாவில் குறைந்த செலவில் இவ்வளவு விரைவாக மருத்துவச் சேவைகள் கிடைப்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது வீடியோவை 1.68 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து, தங்களது கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோவைப் பார்த்த பலரும், இந்தியாவில் மருத்துவச் சேவைகள் விரைவாகக் கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், மருத்துவச் சேவைகளின் தரம், காத்திருப்பு நேரம் மற்றும் செலவு ஆகியவை மருத்துவமனை மற்றும் சிகிச்சையைப் பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *