நடிகர் விஜயின் தளபதி 68 அப்டேட் விரைவில்; கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி டிவீட் செய்த இயக்குனர் வெங்கட் பிரபு

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

“தளபதி 68” திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘லியோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருவதால், ரசிகர்கள் மத்தியில் ‘தளபதி 68’ மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏ. ஜி.எஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகும் ‘தளபதி 68’ ன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யின் பழைய தோற்றத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும், பகவதி, யூத் படத்தில் இருந்த விஜய் தோற்றம் இப்படத்தில் 10 நிமிட காட்சியாக இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு ‘பாஸ்’ என பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் ’தளபதி 68’ திரைப்படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *