காஷ்மீரில் பயங்கரவாதத்தின் தாக்கம், மும்பை பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.8 வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 589 புள்ளிகள் குறைந்து 79,213 புள்ளிகளாக உள்ளது. நண்பகலில் 1195 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் இறுதியில் மீட்பு பெற்று 589 புள்ளிகளில் சரிந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகின்றன. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207 புள்ளிகள் சரிந்து 24,039 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாகின்றன. திடீர் பங்குச்சந்தை சரிவு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக கருதப்படுகிறது.
