நடிகரும் தற்போதைய முதலைமைச்சருமான விஜய்யின் கடைசி திரைப்பரப்டமான ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23-ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்தது.
சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படம் அன்று வெளியாகவில்லை. இதனிடையே, தமிழ்நாடு சட்டமன்மன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘A’ சான்றிதல் வழங்கப்பட்ட பின்னர் படம் வெஇயானது. பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வெளியான ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.78 கோடி வசூலித்தது.
படம் வெளியாகி 5 நாட்களை கடந்தும் ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்குகள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் 5 நாட்களில் 233 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன்’ திரைப்படத்தின் 5 நாட்களில் 200 வசூலை கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

