கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, 21 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான இவர் தனது 18 வயதில் 2005-ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமாகி 207 போட்டிகளில் 125 கோல்கள் அடித்து, அணியின் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனைகளைப் படைத்துள்ளார். 2026 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து சர்வதேச கால்பந்து ஓய்வை மெஸ்சி அறிவித்தது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

