தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். பிராந்திய மொழிகளை கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே துறையின் சார்பாக தென்னக ரெயில்வேயில் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் பெரும்பாலானோர் வட இந்தியர்களாகவே உள்ளனர். அவர்கள் தமிழக பயணிகளிடம் ஹிந்தியில் பேசுவதாலும், சரியான முறையில் தமிழில் பதிலளிக்கமுடியாததாலும் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. இது பலமுறை பல தமிழக அரசீயல் கட்சிகளால் இப்பிரச்சனை பெரிதாக போராட்டங்கள் நடத்தி வெளிக்கொண்டுவந்தன. இதனால் தற்போது தமிழகத்தில் வேலை செய்யும் ரயில்வே ஊழியர்கள் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவை பிறபித்துள்ளது. அதுமட்டுமள்ளாது, டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்