ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் 2 பதக்கங்கள் வென்று அசத்தல்

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு தமிழ்நாடு நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு ஜப்பான்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் இளவேனில் 2வது பதக்கம் வென்றார். 20-வது ஆசிய விளை​யாட்​டுப் போட்டி ஜப்​பானின் ஐச்சி-நகோயா மாகாணத்​தில் உள்ள மைசுஹோ பார்க் தடகள மைதானத்​தில் நேற்று கோலாகல​மாக தொடங்​கியது. இன்று காலை 6 மணி அளவில் நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் தகுதி சுற்று மற்றும் அணிகள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன், சோனம் மஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் வெள்ளி வென்றனர்.
இது நடப்பு ஆசிய தொடரில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாக அமைந்தது. தொடர்ந்து 27 வயதான இளவேனில் வாளறிவன், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றுள்ளார். 252.4 புள்ளிகளை பெற்று அவர் இரண்டாம் இடம் பிடித்தார். ஜப்பான் வீராங்கனை ஹினாதா டைச்சி 253 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார். இதன் மூலம் ஒரே நாளில் 2 பதக்கங்களை வென்று இளவேனில் அசத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *