NRTIA சார்பாக காலமான தமிழர் உடலை தாயகம் அனுப்பி வைத்த கடல் கடந்த மனிதநேயப் பணி.

அரபு நாடுகள் செய்திகள்



வெளிநாடு வாழ் இந்தியர் அணிச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்எம். அப்துல்லா எம் பி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க

சவூதி அரேபியா கிழக்கு மண்டலம் தம்மாம் பகுதியில் பணிபுரிந்து வந்த இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டிணத்தைச் சார்ந்த ஃபரூக் வயது 38 உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். செய்தி அறிந்து களம் கண்ட கிழக்கு மண்டலம் தம்மாம் NRTIA அணி இறந்தவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உடலை தாயகம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. பல தடங்கள்களுக்கு மத்தியில் நெடிய முயற்சியில் உடலை 2.3.2022 அன்று தாயகம் அனுப்பி வைத்தனர்.

இந்த முயற்சியில் சவூதி அரேபியா கிழக்கு மண்டல சமூக செயற்பாட்டாளர் நாஸ்வக்கம் மற்றும் NRTIA அயலக முதன்மைச் செயலாளர் மாயவரம் வெங்கடேஷன் அறிவுறுத்தலின் படி சவூதிஅரேபியா NRTIA துணைஅமைப்பாளர் திருச்சி ஆரிஃப் மக்பூல்,கிளை பொறுப்பாளர் முகவை சீனி முஹம்மத், மற்றும்

சென்னை ஜியான், கமால் பாஷா,ஏர்போர்ட் கணேசன், இராமநாதபுரம் சாபிக் அஹமது,
குருவாடி முஹம்மது யாசர், உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இப்பணியைத் திறம்படச் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *