ஏப்ரல் 22 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் வலுவான பதிலடியையும், தேசிய பாதுகாப்பில் நாட்டின் உறுதியையும் உலகிற்கு காட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் தனது எக்ஸ் போஸ்டில், “ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா பெற்ற மகத்தான வெற்றி, நமது வீரர்களின் குறிப்பிடத்தக்க வீரத்திற்கும் தேசபக்திக்கும் ஓர் எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டாகும். மேலும் இன்று, ஓராண்டுக்குப் பிறகு, பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, அதற்குத் துணைபுரியும் சூழலை அழிப்பதற்கான நமது உறுதியில் முன்பைப் போலவே நாம் அசைக்க முடியாதவர்களாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

