மரங்களை வளர்த்து பூமித்தாயை பாதுகாக்க வேண்டும்; பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் உருக்கம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி

மரங்களை வளர்த்து பூமித்தாயை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடி முதன் முறையாக மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்குப் பிரியமான நண்பர்களே, உலகின் மிகவும் விலைமதிப்பில்லாத உறவு எது என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் கண்டிப்பாக அம்மா என்றே கூறுவீர்கள். நம் அனைவரின் வாழ்க்கையிலும் அம்மாவுக்கான இடம் மிகவும் உயர்வானதாகவே இருக்கும். அம்மா அனைத்து துக்கங்களையும் சகித்துக் கொண்டு, தனது மக்களை நன்கு வளர்க்கிறாள்.
ஒவ்வொரு அன்னையும் தனது குழந்தைகளின் மீது அன்பை பொழிகிறாள். நம் ஒவ்வொருவரையும் பெற்ற அன்னையின் அன்பு, நம் அனைவரின் மீதும், நாம் என்றுமே திருப்பிச் செலுத்த முடியாத ஒரு கடனைப் போன்றது. நாம் நமது அன்னையர்க்கு ஏதாவது திரும்பச் செலுத்த முடியுமா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன் ஆனால், ஏதாவது செய்ய முடியுமா சொல்லுங்கள்? இந்த எண்ணத்தால் உந்தப்பட்டுத் தான் நான் இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று ஒரு சிறப்பான இயக்கத்தை ஆரம்பித்தேன், இந்த இயக்கத்தின் பெயர் – அன்னையின் பெயரில் ஒரு மரம்.
கடந்த பத்தாண்டுகளாக, அனைவரின் முயற்சிகளாலும், பாரதத்தில் வரலாறுகாணாத வனப்பகுதி விரிவாக்கம் ஏற்பட்டிருக்கிறது. அமுதப் பெருவிழாக்காலத்தில், நாடெங்கும் 60,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்போது நாம் இதைப் போலவே நமது அன்னையரின் பெயரில் மரம் நடும் இயக்கத்திற்கு மேலும் விரைவு கூட்ட வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *