இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்

இலங்கை

.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அவரது அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் ஆகியோரின் வீடுகளை சூறையாடி மக்கள் தீவைத்தனர். இதனால், மகிந்த ராஜபக்சே பதவி விலக நேரிட்டது இந்நிலையில், இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் என கடும் எச்சரிக்கை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை புதிய பிரதமராக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவுடன் கோத்தபய இது குறித்து தொலைபேசியில் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதில் சுமூக நிலை ஏற்பட, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். வரும் 16-ம் தேதி இலங்கை பாராளுமன்ற கூட்டம் நடக்க உள்ள நிலையில் ரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *