ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா செய்திகள் தமிழ்நாடு விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில், இரு அணிகளும் ஒரே வெற்றியைப் பெற்றுள்ளன. இப்போது, இரு அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த போட்டி இன்று டிராவில் முடிவுக்கு வந்தது. போட்டி முடிந்த உடனே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 2010ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய அஸ்வின், இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 765 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அஸ்வின் ஓய்வு அறிவித்ததையடுத்து, பல்வேறு தரப்பினரிடமிருந்து அவருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *