அணு சக்தியால் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை எந்தவொரு வான் பாதுகாப்பு முறைமைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ எனப்படும் இந்த அணு சக்தி இயக்க ஏவுகணையை ரஷ்யா முதன்முதலாக 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.அமெரிக்கா, சக்திவாய்ந்த ஏவுகணை தயாரிப்பைத் தடை செய்யும் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து 2001ஆம் ஆண்டு விலகியதையடுத்து, நேட்டோ கூட்டணியின் படை வலிமை மற்றும் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டங்கள் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டன.

