டெல்லியில் காற்று மாசு குறைவது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லியில் காற்று மாசின் அளவு குறைந்து வரும் நிலையில், தினக்கூலி பணியாளர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளை தொடர காற்றுமாசு மேலாண்மை குழுவிற்கு உத்தரவிட்டனர்.10,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடியாத பள்ளிகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்துவதை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கவும் அறிவுறுத்தி உள்ளது. மதிய உணவு பெரும் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட 13 வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

