சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசன் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தை இயக்கவிருந்த சுந்தர்.சி திடீரென அந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது.சுந்தர்.சி தனது அறிக்கையில், “எதிர்பாராத சூழ்நிலைகளால் கனத்த இதயத்துடன் ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. ரஜினி மற்றும் கமல் ஆகியோரிடம் பணியாற்றுவது எனது கனவு; ஆனால் சில நேரங்களில் வாழ்க்கை நமக்காக வேறு பாதையை காட்டுகிறது. இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகினாலும், தொடர்ந்து அவர்களின் நிபுணத்துவ ஆலோசனையை நான் நாடுவேன். இந்த மாபெரும் படைப்புக்காக என்னை கருத்தில் கொண்டதற்கு, இருவருக்கும் என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சுந்தர்.சி உருக்கமாக பதிவிட்டுள்ளார்” .

