தமிழ்நாடு அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கப்படும் என அரசு மீண்டும் அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக, செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற இருந்த திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய தேதியாக செப்டம்பர் 28 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படும் தங்க மோதிரத்திற்கு தனித்துவமான Unique Serial Number வழங்கப்படுவதுடன், மோதிரம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் சேதப்படுத்த முடியாத Tamper-proof Packaging-லும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இதற்காக கர்ப்பிணிகள் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) முறையில் பதிவு செய்யப்பட்டு, RCH அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தாய் மற்றும் குழந்தை நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், பயனாளிகளின் தகுதி மற்றும் பதிவு விவரங்கள் அடிப்படையில் நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது.

