2027 ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக மராத்தி த்ரில்லர் திரைப்படமான ‘Gondhal’ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் திவாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தியாவின் சார்பில் சிறந்த சர்வதேசத் திரைப்படம் (Best International Feature Film) பிரிவில் ஆஸ்கார் போட்டிக்கான பரிசீலனைக்கு இப்படம் செல்கிறது. மராத்தி திரையுலகில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், த்ரில்லர் கதைக்களத்துடன் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஒரு திரைப்படம் ஆஸ்கார் சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கான அதிகாரப்பூர்வ நுழைவாகத் தேர்வு செய்யப்படுகிறது; அதன் பின்னர் அகாடமி விதிமுறைகளின்படி அடுத்தகட்டத் தேர்வு நடைபெறும்.

