எகிப்தின் 3000 ஆண்டுகள் பழைமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு.

அகழ்வாராய்ச்சி உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மார்சா ஆலமின் தென்மேற்கே உள்ள ஜபல் சுகாரியில் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, கி.மு. 1000 ஆண்டுக்கு முந்தைய தங்கச் சுரங்கத்துடன் தொடர்புடைய தொழிற்துறை மையம் சமீபத்தில் கண்டறியப்பட்டது. லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்ட் என அழைக்கப்படும் இந்த நகரத்தில், டோலமிக் காலத்திற்கேற்ப உருவான பல்வேறு அரிய பழங்காலக் கலைப்பொருட்கள், பழங்கால நாணயங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கத்தை அரைக்கும் மற்றும் நொறுக்கும் நிலையங்கள், வடிகட்டும் படுகைகள், தங்கத்தை உருக்குவதற்கான களிமண் உலைகள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளதால், இந்த நகரம் தங்கத் தொழிலின் மையமாக இருக்கலாம் என கூறுகின்றனர். இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள், அப்பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கை, நிர்வாகம், தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பற்றிய தகவல்களை வழங்குகின்றன.இந்த பகுதி எகிப்து பிரமிடங்களைப் போலவே, சுற்றுலா தளமாக மாறும் வாய்ப்புகளை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *