RISE மலேசியா என்பது எல்லைகளுக்கு அப்பால் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாகும். உலகெங்கிலும் உள்ள தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒன்றிணைத்து, உலகளாவிய தமிழ் பேசும் சமூகம் அதன் வேர்களைப் பற்றி சிந்திக்கவும் அதன் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும் ஒரு சிறந்த தளமாக தி ரைஸ் மலேசியா உள்ளது. The Rise அமைப்பின் கிளையாக இயங்குவது ஆற்றல் இவை வழங்கும் AI First Approach to build products and solutions என்ற நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது. IT துறையின் தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்களுக்கு The RISE என்ற அமைப்பு உருவாக்கிய தனிக் களத்தின் பெயர் “ஆற்றல் – Aatral”. உயிரோட்டமான தன் முதற்கிளை மலேசியாவில் உருவாகிறது. The RISE தலைவர்கள் ஊக்கம் தர, சீராக வளர்கிறது “ஆற்றல் மலேசியா”. இன்று அமெரிக்க ஆற்றல் அமைப்பினர் மலேசியாவில் சிறப்புரையாற்றினர். ஒவ்வொரு மாநாட்டிலும் “ஆற்றல்” கிளைகள் அமையட்டும் என்றனர். மலேசியாவிலிருந்து IT துறை சார்ந்து மட்டுமே 20-க்கும் மேலானோர் சென்னை மாநாட்டில் பங்கேற்கிறார்கள். நினைக்க இனிக்கும் உலகத் தமிழர் சங்கமாக சென்னை மாநாட்டுக்கான முன் பணிகள் வளர்கின்றன.

