கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் Thuglife திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு; புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. சமீபத்தில் கூட நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதை படக்குழுவினர் கொண்டாடினர்.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.149.7 கோடிக்கு விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படம் அடுத்தாண்டு மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *