தமிழகத்தில் அரசு வேலைக்காக TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான அதிகபட்ச வயது வரம்பை தற்போதைய விதிமுறைகளைவிட 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இந்த புதிய அறிவிப்பு 2026 அக்டோபர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், இந்த வயது வரம்பு உயர்வு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.TNPSC குரூப் 1 – புதிய வயது வரம்பு பொதுப்பிரிவினர்: 32 வயதிலிருந்து 37 வயதாக உயர்வு.இடஒதுக்கீட்டுப் பிரிவினர்: 37 வயதிலிருந்து 42 வயதாக உயர்வு.மாற்றுத்திறனாளி பொதுப்பிரிவினர்: 42 வயதிலிருந்து 47 வயதாக உயர்வு.மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டுப் பிரிவினர்: 47 வயதிலிருந்து 52 வயதாக உயர்வு.TNPSC குரூப் 2 மற்றும் 2Aபொதுப்பிரிவினர்: 30 வயதிலிருந்து 35 வயதாக உயர்வு.மாற்றுத்திறனாளி பொதுப்பிரிவினர்: 40 வயதிலிருந்து 45 வயதாக உயர்வு.இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கனவே உள்ள அதிகபட்ச வயது வரம்பு இல்லாத நடைமுறை தொடரும்.TNPSC குரூப் 4கூடுதல் கல்வித்தகுதி இல்லாத பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 30-ல் இருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.BC, BCM, MBC, DNC பிரிவினர்: 32 வயதிலிருந்து 37 வயதாக உயர்வு.SC, ST மற்றும் ஆதரவற்ற விதவைகள்: 35 வயதிலிருந்து 40 வயதாக உயர்வு.மாற்றுத்திறனாளிகளுக்கும் கூடுதலாக 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களுக்கான குரூப் 4 வயது வரம்பிலும் பொருந்தக்கூடிய விதிமுறைகளின்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.யாரெல்லாம் பயன்பெறுவார்கள்?BC, BCM, MBC, DNC, SC, ST மற்றும் ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வயதுத் தளர்வுக்கு மேலாக இந்த 5 ஆண்டு சலுகை வழங்கப்படுகிறது.இதன் மூலம் வயது வரம்பைக் கடக்கும் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான அரசு வேலை தேடுபவர்கள் மீண்டும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.பல ஆண்டுகளாக TNPSC தேர்வுகளுக்குத் தயாராகி வந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
