தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவுக்கான நிகழ்வில், பனையூர் அலுவலகத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜ், அஞ்சலியம்மாள், வேலு நாச்சியார் ஆகியோருக்கு கட்சித் தலைவர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலியுடன் மரியாதை செலுத்தினார். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்வில் தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்றார்.மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் கோவில் சாலையில், மதுர் பிஷ்ணுவில் மிகப்பெரிய இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில், சிறிய காளை மற்றும் பெரிய காளை என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றியாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெக நிர்வாகிகள் அவருக்கு ஒரு பெரிய மாலை அணிவித்து, அன்புடன் வரவேற்றனர். வெற்றிமாறன் இந்த நிகழ்வில் மட்டுமே கலந்து கொண்டதாகவும், கட்சியில் சேரவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

