87வது டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீயில் நடைபெற்று வருகிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் 12 சுற்றுகளுக்குப் பிறகு, குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் 8½ புள்ளிகளுடன் முன்னணி இடத்தில் உள்ளனர். ஆனால், 13வது மற்றும் இறுதி சுற்றில், இருவரும் தங்கள் போட்டிகளில் தோல்வியடைந்தனர். குகேஷ், தனது நாட்டவரான அர்ஜுன் எரிகைசிக்கு எதிராகவும், பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமருக்கு எதிராகவும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா சம புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். வெற்றியாளரை கண்டறிய டை பிரேக்கர் முறையை பயன்படுத்தினர். இதில், உலக சாம்பியன் குகேஷை தோற்கடித்து, பிரக்ஞானந்தா இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று, அசத்தலான சாதனையை உருவாக்கியுள்ளார்.

