அமெரிக்கா நியூ ஜெர்சியில் இரு இளம் இசை கலைஞர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் முற்றிலும் தமிழ் மொழியில்!
தேதி: 20 ஜூலை 2025, இடம்: J P Case Middle School, Case Blvd, Flemington, New Jersey, நேரம்: 3:30 PM EST
“இசை என்பது ஓர் ஆறுதல் மற்றும் உணர்வு. மொழி, வடிவம், மரபு எல்லாவற்றையும் கடந்தும் அது மனித மனதின் தூய வெளியீடாக மலர்கிறது — ராகத்தில் உணர்வு இசைதொடு குரலாகி, தாளத்தில் சந்தோஷம் ஓங்குகிறது.”பொதுவாக வாய்ப்பாட்டு அரங்கேற்றம் தெலுங்கு மற்றும் சமஸ்கிருத கீர்த்தனைகள் முக்கிய இடம் பெறுகின்றன. ஆனால் அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த இரு இளம் இசை கலைஞர்கள் ஸ்ரீஹரி சென்ஆர்ட்(18) மற்றும் ரேவந்த் சென்ஆர்ட்(11) இவர்கள் முன்னெடுக்கவுள்ள வாய்ப்பாட்டு அரங்கேற்றம் தமிழ் மொழியில் பாடுவதை மையமாகக் கொண்டு நிகழ்வதை சிறப்புமிக்க மாற்றமாக அமைய இருக்கிறது.காரைக்கால் ஸ்ரீ வேங்கடசுப்பிரமணியன் அவர்கள் வழிகாட்டுதலில், இந்த இளம் கலைஞர்கள் முழுமையாக தமிழிலேயான பாடல்கள் மட்டுமே இசைப்பார்கள் — இது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மற்றும் இசை நேசிப்பவர்களுக்கு பெருமிதமான தருணமாகும். இந்த நிகழ்ச்சியில் தேவாரம், திருவாசகத்திலிருந்து ஆன்மிகப் பாடல்கள், மகாகவி பாரதியாரின் தேசபக்தி கவிதைகளில் பாடல்கள், தமிழ் கடவுள்களை போற்றும் பக்திப்பாடல்கள். புகழ்பெற்ற தமிழ் கவிஞர்களின் படைப்புகள் மற்றும் தமிழ் திரைப்பட பாடல்களில் இருந்து சங்கீத அடிப்படையிலான பாடல்களும் இடம் பெற இருக்குகின்றது.“இது இசைச் சம்பிரதாயம் மட்டும் அல்ல,” என்கிறார் குரு வேங்கடசுப்பிரமணியன். “இது தமிழ் மொழியின் அழகுக்கும், சங்கீதத்திற்கும் அற்புதமான அஞ்சலியாகும். தமிழ் இன்று இசைக்கப்படுவதில்லை – கொண்டாடப்படுகிறது.”இந்நிகழ்வை பங்கேற்று சிறப்பிக்கவுள்ள சிறப்பு விருந்தினர்கள்:- திரு. கால்டுவெல் வெல்நாம்பி – NoblQ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தமிழ்நாடு அரசின் NRT வாரியத்தின் வட அமெரிக்கா பிரதிநிதி- திரு. சினேகன் – பிரபல தமிழ்ப் பாடலாசிரியரும், கலாச்சாரத் தொண்டாளரும்- திருமதி நிர்மலா பெரியசாமி – மூத்த செய்தி வாசிப்பாளரும், சமூக செயற்பாட்டாளரும், கலைமாமணி விருதுபெறுபவர்இது அமெரிக்காவில், தமிழில் மட்டுமே பாடப்படும் முதன்மையான குழந்தைகளின் வாய்ப்பாட்டு அரங்கேற்றமாக இருக்கக்கூடிய ஒரு சிறப்பு நிகழ்வாகும். இது ஒரு தமிழையும், இசையையும் உன்னதமாக நேசிக்கும் ஒவ்வொருவரும் தவறாமல் பங்கேற்க வேண்டிய நிகழ்வாகும்!