அனைத்து EV கார்களிலும் செயற்கை ஒலி கட்டாயம் .

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

இந்தியாவில் அனைத்து மின்சார வாகனங்களிலும் (EV) செயற்கை ஒலி அமைப்பை கட்டாயமாக்க ARAI அமைப்பு முடிவு செய்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, AVAS (Acoustic Vehicle Alerting System) என்ற ஒலி எச்சரிக்கை அமைப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் அனைத்து EV கார்களிலும் பொருத்தப்படும்.மின்சார வாகனங்கள் அதிக சத்தம் இல்லாமல் செல்லுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒலி அமைப்பை இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களிலும் கட்டாயமாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *