மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி , அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பெண் போலீசார்களையும், போலீசார்களையும் அவதூறாக பேசியதாகக் கூறி, யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை சைபர் கிரைம் காவல் துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் மீது சில பிற குற்றச்சாட்டுகளும் உள்ளன. தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்திவிட்டார், ஆனால் இதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும், சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாகவும், மேலும் சில வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு 2-வது முறையாக சவுக்கு சங்கர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவர் மீது மேலும் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாவிட்டால், அவரை ஜாமீனில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டு, வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது . இதற்கிடையில், மதுரை மத்திய சிறையில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறைக்கு வெளியே சவுக்கு சங்கரை அவரது வழக்கறிஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

