2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பெற்றார் ‘பார்க்கிங்’ பட தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ். பார்க்கிங்’ படத்திற்காக சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருதை பெற்றார் இயக்குநர் ராம்குமார். மேலும் பார்கிங் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். “வாத்தி” திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். மலையாளத்தில் வெளியான ‘உள்ளொழுக்கு’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார் நடிகை ஊர்வசி. திரைத் துறைக்கு வாழ்நாள் பங்களிப்பு செய்தமைக்காக மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை முதன் முறையாக பெற்றார் நடிகர் ஷாருக் கான். ‘Mrs Chatterjee Vs Norway’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுக் கொண்டார் ராணி முகர்ஜி .’12th Fail’ படத்துக்காக நடிகர் விக்ராந்த் மாஸேக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
