பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழிந்தது – விசாரணைக்கு உத்தரவிட்டார் நிதீஷ் குமார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில் அம்மாநில அரசால் கட்டப்பட்டு வந்த அகுவானி – சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழும் தருணத்தை அப்பகுதி மக்கள் வீடியோவில் பதிவு செய்தனர். பாலம் கட்டுவதற்கான செலவு சுமார் ரூ. ரூ.1,750 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் காலை 6 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த விபத்துக்கு காரணமானவர்களை அடையாளம் காணவும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *