மழை காரணமாக தனது இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.
ரஹ்மான் இசையில் இந்த வருடம் பத்து தல, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன் படங்களின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.
சென்னையில் தற்போது மழை பெய்துவருவதால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அவரது பதிவில், என் அன்பு நண்பர்களே, கால நிலை காரணமாகவும் மழை காரணமாகவும் என் ரசிகர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு காரணமாக இசை நிகழ்ச்சி வேறு தேதிக்கு மாற்றப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ரசிகர் ஒருவர் நல்லவேளை நான் வேளச்சேரி தாண்டவில்லை என்று குறிப்பிட இதயம் உடைந்த எமோஜியைப் பகிர்ந்து, லவ் யூ என குறிப்பிட்டுள்ளார்.

