ஸ்விகி நிறுவனம் 400 ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 6 விழுக்காடு ஆகும். மைக்ரோசாப்ட், கூகுள் என அனைத்து நிறுவனங்களும் தங்களின் வேலையாட்களின் திறனை குறைத்து வருகிறது. அந்த வகையில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனமாக ஸ்விகியும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, 400 ஊழியர்களை நிறுவனம் நீக்க திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் செலவினத்தைக் குறைத்து, தொழிலை வளர்க்க திட்டமிட்டுள்ளதன் விளைவாக தான் ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்விகி நிறுவனம் கிட்டத்தட்ட 380 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது நினைவுக்கூறத்தக்கது.
தங்களின் இன்ஸ்டாமார்ட் சேவையை மேம்படுத்தவும், அதிக பணத்தை அதில் முதலீடு செய்யவும் ஸ்விகி திட்டமிட்டுள்ளது.

